மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. 5 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், நேற்று மந்தனா தலைமையிலான RCB அணியானது, பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய, குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்து இருந்தது.
இதில், அதிகபட்சமாக, பெத் மூனி 85, வால்வார்ட் 76 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தனர். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RCB அணியில், எல்லிஸ் பெர்ரி 24, ஸ்மிருதி மந்தனா 24, சோஃபி டெவின் 23 என அடுத்தடுத்து வெளியேற, மறுபுறம் ஜார்ஜியா வேர்ஹாம் 48 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். இதனால், RCB அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்து, 19 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது.