Author: Amigoways

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது போட்டியில் அஸ்வினுக்கும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை அளித்து கெளரவித்தது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டி அஸ்வினுக்கு 100-வது சர்வதேச டெஸ்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி சார்பாக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14-வது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியின்போது இந்திய அணி சார்பாக தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பி.சி.சி.ஐ. சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது. அவருக்கு நூறாவது டெஸ்ட் கேப்பினை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி பிரீத்தி மற்றும் அவரது இரண்டு மகள்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த…

Read More

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. 5 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், நேற்று மந்தனா தலைமையிலான RCB அணியானது, பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய, குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199  ரன்களை குவித்து இருந்தது. இதில், அதிகபட்சமாக, பெத் மூனி 85, வால்வார்ட் 76 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தனர். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RCB அணியில், எல்லிஸ் பெர்ரி 24, ஸ்மிருதி மந்தனா 24, சோஃபி டெவின் 23 என அடுத்தடுத்து வெளியேற, மறுபுறம் ஜார்ஜியா வேர்ஹாம் 48 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். இதனால், RCB அணி 20 ஓவர் முடிவில் 8…

Read More

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் யு.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி.வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும். இந்நிலையில்,  மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், யு.பி.வாரியர்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மும்பை…

Read More

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஆடுஜீவிதம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம். இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்)  தழுவி எடுக்கப்பட்டதாகும்.  மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார்.  கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக் கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு.  2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.  நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார்.  இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது. வரும் மார்ச்…

Read More

TANCET, CEETA நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நாளை அண்ணா பல்கலைகழகத்தில் செயல்படும் தகவல் மையத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட்  எம்சிஏ , எம்பிஏ மற்றும் CEETA PG 2024 தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு TANCET , CEETA PG 2024 தேர்வுகளை மொத்தம் 39,301 தேர்வர்கள், 40 தேர்வு மையங்களில் 14 நகரங்களில் தேர்வு எழுத உள்ளனர். குறிப்பாக TANCET – MCA தேர்வு வரும் மார்ச் 9 ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு 9206 பேர் பதிவு செய்துள்ளனர். TANCET – MBA தேர்வு மார்ச் 9 ஆம் தேதி மதியம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு 24,814 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். M.E/ M.TECH./ M.Arch/ M . Plan படிப்புகளுக்கு…

Read More

மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது என ஹிந்தி திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் புகழ்ந்துள்ளார். ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுபவர் இயக்குநர் அனுராக் காஷ்யப்.  இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.  இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’,  ‘ராமன் ராகவ்’,  ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றது.  தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார்.  லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.  அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகவும் இப்படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.  இந்நிலையில், அனுராக் காஷ்யப்,  “மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது.  அவர்களது தைரியம்,  பிடிவாதம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுள்ள கேரள ரசிகர்கள் திரைப்படமாக்குதலில்…

Read More

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மாவட்டம்தோறும் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வாட்ஸ் அப் மூலம் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் அவசர தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட தலைவர்கள் தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில்…

Read More